ஆசிரியரை மிரட்டி நிர்வாண வீடியோ ; படுக்கைக்கு அழைத்த மாணவர் : சென்னையில் அதிர்ச்சி

381
college student

கல்லூரி பெண் உதவி பேராசிரியரை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் ஆந்திராவை சேர்ந்த விவேஷ் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பும் அவர் படித்து வந்தார். அதே கல்லூரியில் ஆந்திராவை சேர்ந்த உதவி பெண் ஆசிரியை பணிபுரிந்து வந்தார். இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் நட்புடன் பழகி வந்தனர்.

ஒரு பார்ட்டி கொடுப்பதாக கூறி அப்பெண்ணை விவேஷ் வெளியே அழைத்துள்ளார் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர் மற்றும் தனது கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பதால் அவரை நம்பி அப்பெண்ணும் வர சம்மதித்தார். கடந்த 19ம் தேதி இரவு 7 மணி அளவில் பேராசிரியை தங்கியிருக்கும் விடுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவேஷ் அவரை அழைத்துக் கொண்டு கிழக்கு கிழக்கு கடற்கரை சாலை நோக்கி பயணித்தார்.

மாமல்லபுரம் அடுத்து இருளான ஒரு சாலையில் திடீரென வாகனத்தை திருப்பியுள்ளார். இங்கே எதற்கு என ஆசிரியை கேட்டபோது இங்கேதான் பார்ட்டி ஏற்பாடு செய்கிறேன் என கூறியுள்ளார் அவர் மீது இருந்த நம்பிக்கை காரணமாக ஆசிரியை அமைதியாக இருந்துள்ளார். சவுக்கு மர தோப்புகள் இருந்த பகுதிக்கு ஆசிரியை அழைத்து சென்ற விவேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரது ஆடைகளை களையுமாறு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்து போன ஆசிரியை அதிர்ச்சியில் என்ன செய்வதென்று புரியாமல் தன்னை விட்டுவிடும்படி கண்ணீர்விட்டு கெஞ்சியுள்ளார்.

பாருங்க:  தூங்க சொன்ன தாய்... தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற மகன்..

ஆனாலும் அவரை மிரட்டி ஆடைகளை களைந்து தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்துள்ளார். அதன்பின் இது பற்றி வெளியே கூறக் கூடாது என மிரட்டி விட்டு அப்பெண்ணை மீண்டும் அழைத்துக் சென்று அவர் தங்கியிருக்கும் விடுதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார் அடுத்த நாள் காலை அவருக்கு அவரை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் இல்லையேல் வீடியோவை இணையத்தில் லீக் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே நிவேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியை ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் சென்னையில் அவருக்கு உதவ யாரும் வர மாட்டார்கள் எனவே புகார் அளிக்க மாட்டார் என நம்பி இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.