கடந்த மார்ச் 23ம் தேதி கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய அரசு லாக் டவுன் ஆரம்பித்தது. லாக் டவுனில் நிறைய மக்கள் கஷ்டப்பட்டனர் மக்களுக்கு சொல்லொணா துயரமாக லாக் டவுன் இருந்தது.
அப்போது எல்லாமே அடைக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் அப்போது அடைக்கப்பட்டது முதல் இதுவரை திறக்கப்படவில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கூட அனைவரும் எழுதாமலே பாஸ் பண்ண வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று முதல் கல்லூரிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது அதிலும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே கல்லூரி நடைபெறும்.
முகக்கவசம் அணிந்த மாணவர்கள் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனுமதித்து சுழற்சி முறையில் நடத்த வேண்டும் என அரசு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளன.