கல்லூரி மாணவி படுகொலை – குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!

258
கல்லூரி மாணவி படுகொலை

பழகிவிட்டு தற்போது பேச மறுப்பதால் கல்லூரி மாணவி திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவரின் மகள் திலகவதி விருதாச்சலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை அவர் கத்தியால் குத்தப்பட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசாரின் விசாரணையில் ஆகாஷ் என்கிற வாலிபர் கைது செய்யப்பட்டார். திலகவதியை தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

நானும் திலகவதியும் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒன்றாக படித்து வந்தோம். இருவரும் காதலித்தோம். ஆனால், நான் படிப்பை நிறுத்திவிட்டேன். எனவே, அவர் என்னிடம் முன்பு போல் பேசுவதில்லை. என் செல்போன் எண்ணையும் அவர் பிளாக் செய்து விட்டார்.  கல்லூரி முடிந்து நேற்று அவர் வீட்டிற்கு வந்த போது இது பற்றி கேட்க நேரில் சென்றேன்.

ஆனால், அப்போது இருவருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அவர் என் கன்னத்தில் அறைந்தால். இதனால் ஆத்திரமடைந்த நான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கத்தியால் அவரின் வயிற்றில் குத்திவிட்டு தப்பிசென்றுவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பாருங்க:  சென்னையில் 29 செய்தியாளர்களுக்கு கொரோனா! பிரஸ்மீட்களால் பரவியதா?