cinema news
பிழைப்பாரா பி.டி.சார்?…ஆதியை காப்பாத்தி கொடுக்குமா கலெக்ஷன்?…
ஹிப்-ஆப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்தும், இசையமைப்பாளராக 25வது படம் என்ற சாதனையையும் செய்யவைத்துள்ளது பி.டி.சார். படம் வெளியான முதல் நாளான நேற்று பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்றிருந்தது. படம் பற்றிய விமர்சனம் நேற்று நமது பக்கத்திலும் சொல்லப்பட்டிருந்தது. பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக தான் இந்த படத்தை இயக்கியிருக்கின்றார் கர்த்திக் வேணு கோபால்.
பள்ளியில் பயின்று வரும் மாணவி அனிகாவிற்கு நேர்ந்த கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் கதையின் நாயகன் ஆதி பொங்கி எழுந்து நீதி வாங்கிக்கொடுக்கிறார். இப்படி அழுத்தமான ஒரு கதை கருவை கொண்டு வெளிவந்துள்ளார் பி.டி.சார். ஐசிரி கணேசன் ‘வேல்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரிப்பில் வெளிவந்துள்ளது இந்த படம்.
சுமார் 10 கோடி ருபாய் செலவில் படம் உருவாகியுள்ளதாக செய்திகள் சொல்லியிருந்தது. தமிழ் சினிமாவின் இன்றைய நிலையை பார்க்கும் போது இது குறைந்த பட்ஜெட் படம் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் 0.70 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வார இறுதி இன்றும், நாளையும் என்பதாலும், ராமராஜனின் “சாமானியன்” தவிர வேறு பெரிய படங்கள் ஏதும் போட்டிக்கு இல்லாததாலும் பி.டி.சாரை நோக்கி மக்களின் படையெடுப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கோடை விடுமுறை இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதாலும் பள்ளி, கல்லூரிகளும் விரைவில் திறக்கப்பட உள்ளதாலும் விடுமுறை கொண்டாட்டங்கள் உச்ச கட்டத்தில் இருக்கிறது இப்போது.
இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவர்ந்துள்ளவர் ஆதி. 2கே கிட்ஸ்களுக்கு பிடித்தமானவர் இவர் என்பது பி.டி.சாருக்கு சாதகமான ஒன்றாக உள்ளது. இதனால் பி.டி.சாரை அதிகமாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் படத்தின் வசூலும் அதிகரிக்க வாய்ப்பு ஏராளமாகவே இருக்கிறது.
பி.டி.சார் பட விமர்சனம்…இங்கே கிளிக் செய்ய்யவும்…
அடிச்சி தூக்கினாரா ஆதி?…பி.டி.சார் பட விமர்சனம்…