Tamil Flash News
வெளிச்சம் மங்குதா ஸ்டாருக்கு?…வசூலை அள்ளிக்குவித்து அலப்பறை காட்டும் அர்ணமனை-4!…
கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் நேற்று வெளியானது “ஸ்டார்”. பெரிய அளவில் படங்கள் வெளியாகாத நேரத்தில் வந்துள்ளது “ஸ்டார்”. என்ன தான் போட்டிக்கு ஆள் இல்லேன்னா கூட படத்தை பார்க்க கூட்டம் வர வேண்டுமல்லவா?. இதனை மனதில் வைத்து கொண்டு தான் இளன், யுவன் ஷங்கர் ராஜாவை படத்தில் கமிட் செய்துள்ளார் போல.
“டாடா “படத்தை தாண்டிய வெற்றியை பெற்றுத்தரும் என நினைத்திருந்த கவினுக்கு இல்ல நீங்க நெல்சனோட ப்ளடி பெக்கர் ரிலீஸ் ஆகும் வரை காத்திருக்க வேண்டியதிருக்கும் போலயே என சொல்ல ஆரம்பித்து விட்டார்களாம் ரசிகர்கள்.
“ஸ்டார்” படம் பற்றிய விமர்சனத்தை நமது இதே பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்தோம். படத்தின் வசூல் விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு இந்த தகவல். வெளிவந்த முதல் நாளான நேற்று “ஸ்டார்” சுமார் 2 கோடி ரூபாய் வரை தமிழகத்தில் மட்டும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வெளி மாநிலங்களில் சுமார் 75 லட்சம் என்பதையும் சேர்த்து பார்த்தால் மொத்தம் 2.75 கோடியாக வரை இருக்குமாம் வசூல்.
“டாடா” பட வசூலை நெருங்க இன்னும் கொஞ்சம் போராட தான் வேண்டியதிருக்கும் போலவாம் “ஸ்டார்”. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் இனி வரும் நாட்களில் பட வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்கிறது படக்குழு.
“ரசவாதி” படத்தின் வசூல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றைய ட்ரென்டில் ‘ஒன் மேன் ஷோ’ காட்டி வருகிறார் சுந்தர்.சி. படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூலித்து வருவதை நினைத்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகிறாராம் சுந்தர்.சி. இந்த வசூலை வைத்து அரண்மனையை விரிவாக்கம் செய்து மேலும் பல ரூம்களை கட்டி விடுவார் போலயே என சொல்லி வருகின்றார்கள் நெட்டிசன்கள். அதாவது அரண்மனை 5, 6, 7 என பாகங்களை அதிகரிக்கலாம் என நினைக்க வைத்துள்ளது, இப்போது அரண்மனை நான்கிற்கு கிடைத்துள்ள சுமார் 50 கோடிக்கு மேலான வசூல்.
ஸ்டார் பட விமர்சனத்தை காண கீழே க்ளிக் செய்யவும்…
ஸ்டாருக்கு பிறகு ஜொலிப்பாரா கவின்?… இந்த முகத்தை வைச்சிக்கிட்டு எப்படி இதெல்லாம் நடக்கும்?…