கோவையில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தீவிரம்

34

தமிழ்நாடு எங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் மட்டும் மிக அதிக அளவு வைரஸ் தாக்கம் தினசரி பதிவாகி வருகிறது சென்னையை விட அதிக தொற்று பரவி வரும் மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. அருகில் உள்ள மற்ற மாவட்டங்களான திருப்பூர் மற்றும் ஈரோடில் இதுதான் நிலைமையாக உள்ளது.

இந்த நிலைமையில் கொரொனாவை கட்டுப்படுத்தும் விதத்தில் இன்று முதல் இந்நிலையில், அனுமதியின்றி இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் மா.சுப்பிரமணியன், தொற்று பரவலை குறைக்க தீவிரமாக செயல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படாத ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதே கோவையில் தொற்று அதிகரிக்க காரணம் என்றார்.

தொற்று பரவலை குறைக்க, ஊரடங்கு விதிகளை கடுமையாக்க போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தொழில் நிறுவனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அனுமதியின்றி இயங்கும் ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கூறினார்.

பாருங்க:  நாங்க உதவலனா சர்கார் படமே வந்திருக்காது - விஜயை மிரட்டும் கடம்பூர் ராஜூ
Previous articleசெல்வராகவனின் புதிய தத்துவம்
Next articleதிடீர் போராளிகளை எதிர்த்து கவிஞர் தாமரையின் பதிவு