Connect with us

கோட் சூட் போட்டு திருமணத்துக்கு கிளம்பிய மாப்பிள்ளை- தண்ணீரில் இறங்கி தெருநாயை காப்பாற்றிய ஆச்சரியம்

Latest News

கோட் சூட் போட்டு திருமணத்துக்கு கிளம்பிய மாப்பிள்ளை- தண்ணீரில் இறங்கி தெருநாயை காப்பாற்றிய ஆச்சரியம்

இவ்வுலகம் போற போக்கில் எல்லோரும் அதற்கு ஈடு கொடுத்து வேகமாக சென்று கொண்டிருக்கின்றனரே தவிர யாரும் நின்று நிதானமாக செல்வது கிடையாது.

அவசரமான இந்த யுகத்தில் சக மனிதர்களை பற்றியே பலர் கவலைப்படுவதில்லை. இதில் எங்கே இருந்து விலங்குகளையும் வாயில்லா ஜீவன்களையும் பற்றி கவலைப்பட போகிறார்கள் என்ற நினைப்பு பலருக்குண்டு.

ஆனால் அப்படியெல்லாம் அல்லாமல் அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இன்னும் இரக்கத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு நிகழ்வுதான் இது.

டெல்லியில், தனது திருமணத்துக்கு புத்தாடை அணிந்து ஒருவர் தயாராகி தன் நண்பருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஆற்று வெள்ளத்தில் ஒரு நாய் தத்தளித்துப் போராடிக் கொண்டிருந்திருக்கிறது. நாயைப் பார்த்த அவர் காரை நிறுத்தி, தான் அணிந்திருந்த கோட் ஐ கழட்டி விட்டு, அருகே இருந்த சுவரில் படுத்து, அவர் நண்பரை தன்னைப் பிடித்துக் கொள்ளச் செய்தபடி, அந்த நாயைக் காப்பாற்றி கரை சேர்த்துவிட்டு, பின் தன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்,  அந்த நபர்.
எவ்வளவு பெரிய புண்ணிய காரியம் செய்திருக்கிறார் பார்த்துக்கொள்ளுங்கள்.

More in Latest News

To Top