காதலன் சித்ரவதை செய்ததால் துணை நடிகை யாஷிகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் யாஷிகா. துணை நடிகையான யாஷிகா சென்னை வடபழனி பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். பெரம்பூரை சேர்ந்த மோகன்பாபு என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
அதையடுத்து, திருமணம் செய்து கொள்ளாமல் பெரவள்ளூர் பகுதியில் வாடைக்கு வீடு எடுத்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, யாஷிகாவை விட்டு மோகன்பாபு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த யாஷிகா கடந்த 12ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் நம்பி வந்த என்னை சித்ரவதை செய்து, என்னை ஏமாற்றி சென்ற மோகன்பாபுவிற்கு உரிய தண்டனை வாங்கி தரவேண்டும்” என வாட்ஸ் அப் மூலம் தனது தாய்க்கு செய்தி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.