திமுக அரசு பதவியேற்று ஓராண்டு காலம் ஆகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை அகற்றி விட்டு திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் பதவியை பிடித்தார்.
இன்று மே 7ம் தேதியுடன் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஓராண்டாகிறது. இந்த நிலையில் ஓராண்டு நிறைவையொட்டி தன் தாயார் தயாளு அம்மாவின் ஆசிர்வாதங்களை முதல்வர் ஸ்டாலின் பெற்றார்.
மேலும் இது குறித்து கூறியுள்ள முதல்வர், கழக அரசு பொறுப்பேற்ற முதலாமாண்டு முத்தான தொடக்கமாக அமைந்துள்ளது. இரண்டாம் ஆண்டு நிச்சயம் இணையற்ற ஆண்டாக இருக்கும்! வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து திராவிடியன் மாடலில் நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம்! எந்நாளும் உழைப்பேன்! தமிழ்நாட்டைக் காப்பேன்! என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.