Connect with us

முதல்வரை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி- முதல்வரிடம் கோரிக்கை மனு

Entertainment

முதல்வரை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி- முதல்வரிடம் கோரிக்கை மனு

தமிழ் சினிமாவில் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் விவேக். தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள், கண்ணெதிரே தோன்றினாள், வாலி, குஷி, முகவரி, சிவாஜி, என பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இந்த நிலையில் கடந்த வருடம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு திடீரென மரணமடைந்தார். நல்ல காமெடி நடிகரான அவரது மறைவு எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவேக் வாழும்போது முழுவதும் மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் வழிமுறையை பின்பற்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் நட்டார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவரது மனைவி அருட்செல்வி நடிகர் திரு. விவேக் அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார்.

பாருங்க:  பின்னணி பாடியது மட்டுமல்லாமல் பின்னணியும் பேசிய எஸ்.பி.பி

More in Entertainment

To Top