Corona (Covid-19)
கோவில் அர்ச்சகர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கிய முதல்வர்
கொரோனாவால் பலதரப்பட்ட மக்களுக்கும் திமுக அரசு நிவாரண உதவியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கோவில் அர்ச்சகர்களும் பல நாட்களாக கோவில் திறக்கப்படாமல் வருமானம் இல்லாமல் முடங்கும் நிலையில் உள்ளனர் அவர்களையும் குடும்பத்தையும் காக்கும் பொருட்டு அவர்களுக்கு 4000 ரூபாய் நிவாரண உதவியும் மற்ற பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்க #COVID19 நிவாரண உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
அரசு அனைவரையும் காக்கும்! pic.twitter.com/qVYMJd11S2
— M.K.Stalin (@mkstalin) June 3, 2021