Latest News
முதல்வர் ஸ்டாலினின் புத்தகத்தை ராகுல் வெளியிட்டது குறித்து அண்ணாமலையின் விமர்சனம்
நேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சுயசரிதையாக உங்களில் ஒருவன் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வெளியிட்டார்.
இதில் மிசா நேர கொடுமைகள் குறித்தும் ஸ்டாலின் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை,
முதலமைச்சர் திரு
ஸ்டாலின்
அவர்களுக்கு பாராட்டுக்கள்.
எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமதி இந்திரா காந்தி அவர்கள் இதை செய்தார்!
அவருடைய பேரன் திரு
ராகுல் காந்தி
அவர்கள் பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்! என கூறியுள்ளார்.