முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள். 93 வயதான இவர் வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார். நேற்று இவரது உடல்நிலை மிக மோசமாகவே சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பால் இவர் மரணமடைந்தார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இரவு1 மணியளவில் இறந்த முதல்வரின் அம்மா தவுசாயம்மாள் உடல் இன்று காலை உடனடியாக தகனம் செய்யப்பட்டது.அம்மாவின் உடலுக்கு அனைத்து மரியாதைகளையும் முதல்வர் செய்தார்.