இந்திய அணிக்கு தேர்வான சேலம் கிரிக்கெட் வீரருக்கு முதல்வர் வாழ்த்து

இந்திய அணிக்கு தேர்வான சேலம் கிரிக்கெட் வீரருக்கு முதல்வர் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன் விளையாடி பல சாதனைகளை பெற்று இருக்கிறார்கள் அதே போல் புதியதொரு சாதனையை நிகழ்த்த புதிதாக தேர்வாகியுள்ளார் சேலம் விளையாட்டு வீரர் நடராஜன். இவர் அதிகமான உள்ளூர் போட்டிகள் மாநிலம் சார்ந்த கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடி வெற்றி பெற்றுள்ளார். இதனால் இவர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

இவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார்.கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்! என முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார்.