Entertainment
சினிமாவில் நடிக்க விருப்பமா- விஜய் சேதுபதி வெளியிட்ட அறிவிப்பு
நடிகர் விஜய் சேதுபதி கடந்த 10 வருடங்களுக்குள் வெகு வேகமாக வளர்ந்த முன்னணி நடிகர். இவரின் படங்களில் இவரின் நடிப்பு எல்லாம் வேற லெவல் என சொல்லும் அளவுக்கு பல வித கதாபாத்திரங்களை செய்தவர் இவர்.
இவர் கூத்துப்பட்டறை கண்டெடுத்த கலைஞர் ஆவார். இவர் நடிப்பு பயிற்சி பெற்றதெல்லாம் கூத்துப்பட்டறையில்தான். அத்தகைய சிறப்பான கூத்துப்பட்டறையின் விளம்பரத்தை விஜய் சேதுபதி தன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகன் ஆவதற்கு கூத்துப்பட்டறை வாருங்கள். தினமும் 4 மணி நேர நடிப்பு பயிற்சி. 78 நாட்கள்,ஞாயிறு தவிர, ரூபாய் 50000 என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
— VijaySethupathi (@VijaySethuOffl) June 1, 2022
