Entertainment
சினிமாவில் நடிக்கும் யூ டியூப் பிரபலம் ரித்விக்
யூ டியூப் சேனல் மூலம் சில நாட்களுக்கு முன் அறிமுகமானவர் ரித்விக். இவர் சிறு குழந்தையாக இருந்தாலும் இவரது தந்தையின் ஆலோசனைப்படி பல கெட் அப்களை அணிந்து க்யூட்டாக நடித்ததால் பிரபலமானார்.
இவர் நியூஸ் வாசிப்பது போல வந்த வீடியோ மிகவும் இவரை பிரபலமாக்கி விட்டது.
இந்த நிலையில் நயன் தாரா நடிக்கும் o2 என்ற படத்தில் ரித்விக் நடிக்க இருக்கிறார். இவர் கோவையை சொந்த ஊராக கொண்டவர் ஆவார்.
02 படத்தை ஜி.கே விஷ்ணு என்பவர் இயக்குகிறார்.
