இனி செல்போன் தேவையில்லை.. வந்துவிட்டது சீக்ரெட் பிரேஸ்லெட்

259

செல்போன் இல்லாமலேயே அதன் வசதிகள் அனைத்தையும் நாம் வேறு வழியில் பயன்படுத்திக்கொள்ளும் விஞ்ஞான வளர்ச்சிகளை அறிஞர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது. அதில் இணையமும் கிடைப்பதால் பல தகவல்களையும் நாம் எளிதில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், செல்போனை எடுத்து செல்வதில் பல சிரமங்கள் இருக்கிறது. ஆண்களாக இருந்தால் சட்டை அல்லது பேண்ட் பாக்கெட், பெண்களாக இருந்தால் கை பேக்கில் வைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் செல்போன்கள் திருடு போய்விடுவதும் உண்டு.

எனவே, செல்போன் இல்லாமலேயே அதன் வசதிகளை பெற சீக்ரெட் பிரேஸ்லெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேஸ்லெட்டை நாம் கை கடிகாரம் அணிவது போல் கையில் அணிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள பைகா புரஜெக்டர் மூலம் நம் கைகளில் ஒரு திரை தோன்றும். அதை நாம் செல்போன் போலவே பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நமக்கு வரும் அழைப்புகளை ஏற்பது, பாடல்களை பார்ப்பது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது என செல்போனில் நாம் பார்க்கும் அனைத்து வசதிகளையும் நாம் பெற முடியும்.

மேலும், நமது செல்போன்களை ப்ளூடூத் மூலம் இணைத்துக்கொள்ள முடியும். 16 மற்றும் 32 ஜிபி மெமரிகளில் இந்த பிரேஸ்லெட் மொத்தம் 10 வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரேஸ்லெட் விற்பனைக்கு வரவுள்ளது.

பாருங்க:  மே 28 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்