இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது உத்திரகோசமங்கை. சிவன் பார்வதி பிறந்த ஊர் என்று அழைக்கப்படும் இவ்வூர் பல்வேறு சிறப்புக்களை கொண்ட சிவன் ஸ்தலம். இக்கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோவிலில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சிலர் ஒரு திருமணம் நடத்துவதற்கு பத்திரிக்கை அச்சடித்து உத்திரகோசமங்கை கோவிலில் வைத்து திருமணம் நடத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர்.
அந்த பத்திரிக்கையானது சமூக வலைதளங்களில் கடுமையாக பரவியது. இந்து முன்னணி உள்ளிட்ட மத அமைப்புகள் இக்கோவிலை முன்பு நிர்வாகத்தையும் அறநிலையத்துறையையும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தது.
இதையடுத்து அப்படி எந்த திருமணத்துக்கும் தாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றும் அவர்களாக கோவிலில் அனுமதி பெறாமலேயே பத்திரிக்கை அடித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வருகின்ற 4ம் தேதி நடைபெற இருப்பதாக சொல்லப்பட்ட அந்த திருமணம் கோவிலில் நடக்க அனுமதி கொடுக்கப்பட மாட்டாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.