Published
1 month agoon
இந்துக்களின் பண்டிகைக்கும் பௌர்ண மிக்கும் நிறைய தொடர்புண்டு.
சித்திரகுப்தன் நம் பாவக்கணக்கை தீர்ப்பவர். எமதர்மனின் உதவியாளரான இவர் நம் சிறுவயதில் இருந்து செய்து வரும் பாவங்களை குறித்து வைத்திருப்பவர் என்ற ஐதீகம் உண்டு.
இவருக்கு என்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில்தான் கோவில்கள் உண்டு அவற்றில் தேனி மாவட்டத்திலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இவருக்கு கோவில்கள் உண்டு.
அதுவும் காஞ்சிபுரம் நகரின் மத்தியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் விசேஷமானது. கேது பகவானால் தோஷம் அனுபவித்து வருபவர்கள் சித்ரகுப்தனை வணங்கலாம் என்பது ஐதீகம்.
சித்ரகுப்தனுக்கு சித்ரா பவுர்ணமியன்றுதான் விசேஷங்கள் நடைபெறும். சித்ரகுப்தனை தொடர்ந்து வணங்கினால் நம் பாவக்கணக்கை குறைத்தும் முன் ஜென்ம வினைகளில் இருந்தும் நமக்கு விடுதலை அளிப்பார்.