சித்ரா மரணத்தின் பின்னணி என்ன

சித்ரா மரணத்தின் பின்னணி என்ன

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சித்ரா. இவரை தெரியாத சீரியல் ரசிகர், ரசிகைகளே இல்லை எனலாம்.

இவருக்கும் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த ஹேம்நாத் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தமும் நடந்து இருந்தது.

சித்ரா சீரியல் படப்பிடிப்பு பூந்தமல்லியில் நடைபெற்று வருவதால் தினமும் தன் வீடு இருக்கும் திருவான்மியூர் சென்று வர முடியாமல் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவரின் வருங்கால கணவரான ஹேம்நாத் என்பவரும் அங்கு தங்கியுள்ளார். இரவு இருவருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சித்ரா ஹேம்நாத்தை குளிக்க போகிறேன் வெளியே செல்லுங்கள் என கூறியதாகவும் அவர் வெளியே சென்ற உடனேதான் சித்ரா உள்ளே கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஹேம்நாத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.