நடிகர் சின்னிஜெயந்த் இவர் கை கொடுக்கும் கை படத்தின் மூலம் இயக்குனர் மகேந்திரனால் அறிமுகப்படுத்தப்பட்டார். இதன் பின் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கல்லூரி மாணவராகவே நிறைய படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவரின் மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பெற்றார். இந்த தேர்வில் மொத்தம் 829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தின் சப் கலெக்டராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திரையுலகினரும், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.