cinema news
துணை கலெக்டரான சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி பாராட்டு
ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை படத்தில்தான் முதன் முதலில் சின்னி ஜெயந்த் அறிமுகமானார். இப்படத்தில் அப்பாவி போல் இருந்து வில்லத்தனம் செய்யும் வேடம் சின்னி ஜெயந்துக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
ரஜினியுடன் ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட படங்களில் எல்லாம் கூடவே இருந்து காமெடி செய்திருந்தார் சின்னி ஜெயந்த்.
சின்னி ஜெயந்த் பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார் சில வருடங்களாக அதிகம் படம் நடிப்பதில்லை. ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சின்னி ஜெயந்த் கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்றதால் அவர் தற்போது தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் , ஜெய் நாராயணன் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டது திரை உலகுக்கு பெருமை என கூறி அவரை பாராட்டியுள்ளார்.
#Breaking | பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் துணை ஆட்சியராக நியமனம் : ரஜினி பாராட்டு!!#Actor | #ChinniJayanth | #DeputyCollector | #Rajinikanth | #Newsupdates | #UpdateNews360 | https://t.co/PSOJ0e1XU3 pic.twitter.com/jeVVU66rrq
— updatenews360 (@updatenews360) August 2, 2021