Entertainment
சின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி
பிரபு குஷ்பு நடித்த சின்னத்தம்பி திரைப்படம் கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்தது. பி. வாசு இயக்கிய இந்த திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம்.
தாலி என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவி ஏழை ஹீரோ, அவரை காதலிக்கும் பணக்கார கதாநாயகி. கதாநாயகியின் அண்ணன்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு என இந்த படத்தின் கதை அமைந்திருந்தது.
இப்படத்தை பி. வாசு இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் இனிமையான காலத்தால் அழியாத பாடல்களாய் வந்திருந்தன.
இந்த படம் நேற்றுடன் வெளிவந்து 30 ஆண்டுகளை தொட்டுவிட்டது. இதை நினைத்து குஷ்பு நெகிழ்ச்சியுடன் ஒரு டுவிட் போட்டுள்ளார்.
முக்கியமாக இயக்குனர் பி. வாசு, இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் குஷ்பு.
