Entertainment
விவேக் இருந்த பகுதிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது- அமைச்சர் மா. சுப்பிரமணியன் சாலையை திறந்து வைத்தார்
தமிழ் சினிமாவில் மனதில் உறுதி வேண்டும் படத்தில் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தலைமை செயலக ஊழியரும் நடிகருமான விவேக்.
ஆரம்ப காலங்களில் ஒல்லியான உடம்புடன் அனைவரையும் கவர்ந்த விவேக் பல சினிமாக்களில் கலக்கினார். எல்லா முன்னணி நடிகர்களுடனும் விவேக் நடித்து புகழ்பெற்றார்.
இந்த நிலையில் கடந்த வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விவேக் மறைந்தார். விவேக் மறைந்தாலும் அவரது பெயர் சொல்லும்படியாக அவரது பெயரை அவர் இருந்த தெருவுக்கு வைக்க வேண்டும் என நடிகர் விவேக்கின் மனைவி முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.அவரது கோரிக்கை ஏற்று அவரது பெயர் அவர் வாழ்ந்த சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என சூட்டப்பட்டுள்ளது. முதல்வர் மா.சுப்ரமணியம் இந்த விழாவில் இன்று கலந்து கொண்டு அந்த பெயர்ப்பலகையை திறந்து வைத்தார்.
