Corona (Covid-19)
சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் தரம் என்ன? சோதனையில் அதிர்ச்சி முடிவு!
சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ள மருத்துவ தடுப்பு உபகரணங்களின் எண்ணிக்கையில் பெரும்பகுதி தர சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழகம் வாங்கவிருந்த நிலையில் அதை மத்திய அரசு தடுத்து தாங்களே வாங்கி மொத்தமாக மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வோம் என அறிவித்தது.
இந்நிலையில் இந்த முதல் தவணையாக நேற்று 6 லட்சத்து 50 ஆயிரம் ராபிட் சோதனைக் கருவிகள், RNA சோதனைக் கருவிகள் சீனாவிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்தன. இந்நிலையில் அந்த கருவிகளில் 50,000 க்கும் மேற்பட்ட பிபிஇ கிட்கள் தர சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறு தோல்வி அடைந்த கிட்கள் அனைத்தும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல என்றும் அவை அனைத்தும் ஒரு தனியார் நிறுவனத்தால் நன்கொடையாக அளிக்கப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது.