கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலில் சிதம்பர ரகசியத்தை விளக்கும் கனகசபை உள்ளது. இந்த கனகசபையில் கொரோனா லாக் டவுனுக்கு முன்பு பக்தர்கள் வழிபட்ட வண்ணம் வந்தனர்.
இந்த நிலையில் கோவில்கள் திறக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் ஒரு ஆண்டுக்கு மேல் சிறப்பாக நடைபெற்று வந்தாலும் இயல்பு நிலை திரும்பினாலும், சிதம்பரம் கோவில் தீட்சிதர்களால் இந்த கனகசபைக்கு செல்லக்கூடாது என தனி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனால் பக்தர்கள் பலர் மனம் வருந்தினர். இதனிடையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மண்டபம் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.