Published
1 year agoon
செட்டிநாடு என அழைக்க கூடிய காரைக்குடி, தேவகோட்டை பகுதிகள் பல விசேஷமான வித்தியாசமான உணவுகளுக்கு புகழ்பெற்றவை ஆகும் இப்பகுதியில் புகழ்பெற்ற வெள்ளைபனியாரமும் கார சட்னியும் பலர் அறிந்திராத ஒரு உணவாகும்.
அனைத்து சுபமுகூர்த்த விழாக்கள் அனைத்திலும் வெள்ளைப்பனியாரம் ஒரு இன்றியமையாத உணவு ஆக இப்பகுதிகளில் இருக்கிறது.
வெள்ளைப்பனியாரமும் சுவையான கார சட்னியும் செய்வது எப்படி என பார்க்கலாம்.
பச்சரிசி 1 கப்
ஒரு கைப்பிடி உளுந்து
இரண்டையும் அலசி நன்றாக தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதை மிக்ஸியிலோ கிரைண்டரிலோ மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.அரைக்கும்போது தண்ணீருக்கு பதில் பால் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். மாவை அரைத்த பின்புதான் மிக கொஞ்சமாய் உப்பு சேர்க்க வேண்டும் அதிக உப்பு சேர்க்க கூடாது, ஒரு கால் டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். மாவு லேசாக தண்ணீராகி விட்டால் லேசாக அரிசி மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
பின்பு கடாயில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு கரண்டியாக மாவை ஊற்றி பொறித்து எடுத்துக்கொள்ளவும். பொன்னிறமாக பொறிக்க கூடாது வெள்ளையாக இருக்கும்போதே எடுத்து விட வேண்டும்.
இதற்கு கார சட்னி செய்முறை
தக்காளி தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் தேவைக்கேற்ப
உப்பு
இவைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கருவேப்பிலை, கடுகு, உளுந்து இவைகளை போட்டு தாளித்து எடுத்துக்கொள்ளவும் அல்லது உங்களுக்கு பிடித்த எந்த ஒரு காரசட்னியும் சேர்த்துக்கொள்ளலாம் சுவையாக இருக்கும்.