செட்டிநாடு பலகாரங்கள் அனைத்துமே புகழ்பெற்றது. தனித்தன்மை வாய்ந்தது. செட்டிநாட்டு விசேட நிகழ்வுகள் பலவற்றில் இடம்பெறும் முக்கிய ஸ்வீட்தான் இந்த உக்காரை.
மணமாகவும் சுவையாகவும் இந்த உக்காரை செய்வது எப்படி என பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்
1கப் கடலைப்பருப்பு
1கப் பாசிப் பருப்பு
1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
1.5கப் வெல்லம்
3 டேபிள் ஸ்பூன் நெய்
5 முந்திரிப்பருப்பு
1/2 கப் தேங்காய்
கடலைப்பருப்பு பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்
பின்பு அதை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்
பின்பு அதன் தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு அரைத்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒன்றரை கப் வெல்லம் எடுத்துக்கொண்டு அதை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அந்த வெல்லம் கரைந்ததும் அதை மீண்டும் கொதிக்க விடவும்.
வெல்லம் பாகு ஒரு கம்பிப் பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள மாவை தூவி கட்டி பிடிக்காமல் கலந்து கொண்டே வரவும்.
சிறிது நெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு வரவும் துருவிய தேங்காய் சேர்த்து நன்குஅ தில் வதக்கவும். அந்த பருப்பு வெந்து உதிரியாக பஞ்சு போல் வரும்.
அந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விட்டு மீதமுள்ள நெய்யில் முந்திரிப்பருப்பை பொரித்து தூவினால் சுவையான உக்கரை ரெடி.