பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 70 நாட்களுக்கும் மேல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.
அதுவும் வனிதா விஜயகுமார் மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்ட நிலையில், பலரிடம் அவர் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சி களோபரத்திற்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த வார எலுமினேசனுக்கான நாமினேஷனில் சேரன், லாஸ்லியா, கவின், ஷெரின் மற்றும் முகேன் என 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சேரனும், ஷெரினும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் அமைதியாக இருக்கும் சேரன் குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேற்றப்பட இருக்கிறார் எனக்கூறப்படுகிறது.
இந்த செய்தி சேரனை ஆதரித்து வருபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.