சொன்னதை செய்தீர்களா? – கவினை கையும் களவுமாக பிடித்த சேரன் (வீடியோ)

217

காதல் தொடர்பாக பதில் கூறும்படி லாஸ்லியாவை கவின் நிர்பந்தம் செய்தது தொடர்பாக சேரன் எழுப்பியுள்ள கேள்வி கவினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போது கவின், லாஸ்லியா இருவருக்கும் சேரன் அறிவுரை கூறிவிட்டு வந்தார். முக்கியமாக, நிகழ்ச்சி முடியும் வரை காதல் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது என கவினிடம் அவர் கூறிவிட்டு வந்தார். ஆனால், நேற்றையை நிகழ்ச்சியில் ‘காதல் இருக்கிறதா இல்லையா என இப்போதே சொல்’ என லாஸ்லியாவிடம் கவின் கேட்டார்.

இதை ரகசிய அறையில் இருந்து கேட்ட சேரன், அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நான் அவ்வளவு கூறியும் மீண்டும் லாஸ்லியாவிடம் இப்படி பேசலாமா? என அவர் கேள்வி எழுப்பும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  மதுக்கடை மூடல்… தமிழ் தாய்மார்களின் குரலுக்கான் வெற்றி- கமல்ஹாசன் மகிழ்ச்சி!