சேரனுக்கும் வனிதாவுக்கும் இடையே வெடித்தது மோதல் – வீடியோ பாருங்க..

192

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான அனைத்து வீடியோக்களுமே பரபரப்பை கிளப்பும் வகையிலேயே இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வனிதா விஜயகுமார் வந்தபின் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மற்றவர்களின் சொந்த பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து வனிதா விமர்சனம் செய்வதால் அவரை அங்கிருக்கும் கவின், சாண்டி, லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் உட்பட யாருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக தர்ஷனிடம் ஷெரின் நெருக்கம் காட்டுவதால், தர்ஷனின் வெற்றியை அது பாதிக்கும் என வனிதா தொடர்ந்து பேசி வருகிறார்.

இதில், ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஷெரின், ஒருகட்டத்தில் பொறுமை இழந்து வனிதாவிடம் சண்டை போடும் காட்சிகள் இன்றைய முதல் புரமோ வீடியோவில் இடம் பெற்றிருந்தது. 2வது வீடியோவில் சேரனிடம் ஷெரின் கதறி அழும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், வனிதாவின் நடவடிக்கைகளை பார்த்தும் பொறுமையாக இருந்த சேரன் அவரின் கோபப்பட்டு பேசும் புரமோ வீடியொ தற்போது வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யார் வருகிறார்கள் தெரியுமா? - கசிந்த செய்தி