அம்மா உணவகத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

1014
Chennai Amma Unavagam
Chennai Amma Unavagam

சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்கள் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் இடங்களாக திகழ்ந்து வருகின்றன. பல இடங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாக ஏழை மக்களுக்காக உணவு அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வழக்கத்தை விட அம்மா உணவகங்களில் உணவு வாங்க மக்கள் கூட்டம் திரண்டது. அங்கு சமூக இடைவெளி முறையாகக் கடை பிடிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் வேலை செய்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  நம்ம புள்ளக்குட்டிகளுக்காக வெளிய போகாதீஙக் – வடிவேலு அழுது வீடியோ !