corona
corona

தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய 5 பேருக்கு கரோனா வைரஸ்!

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்த 5 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உள்ளது. தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள பகுதியாக சென்னை உள்ளது.  அங்கு கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் போலிஸார் மற்றும் ஊடகவியலாளர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனலின் செய்திப் பிரிவு ஆசிரியர் மற்றும் அவருடன் பணிபுரிந்த 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு  முன்னதாக் முன்னணி ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.