சென்னையில் 400 ஐத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை! மின்னல் வேகப் பரவல்!

சென்னையில் 400 ஐத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை! மின்னல் வேகப் பரவல்!

தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்புள்ள சென்னை மாவட்டத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக உள்ளது. 400க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். ஆனாலும் பலி எண்ணிக்கை 18 ஆக உள்ளது. தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை மாவட்டம் உள்ளது.

அங்கு இன்று காலை 10 மணி நிலவரப்படி 400 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சம்மந்தமாக சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக கணக்கு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளித்து வருகிறது.