சென்னையில் இன்று மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவச மெட்ரோ ரயில் பயன செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் புதிதாக டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை, நேற்று திருப்பூட் வந்த பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன் மூலம் தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டைக்கு 40 நிமிடங்களில் செல்ல முடியும்.
இந்த வசதியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நேற்று மாலை முதல் இன்று இரவு வரை இலவசமாக மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.