Latest News
சென்னை ஐஐடியில் 45 நாய்கள் உயிரிழப்பு- கமிஷனரிடம் புகார்
சென்னை ஐஐடி வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக எண்ணிய ஐஐடி நிர்வாகம் அங்கு சுற்றித்திரிந்த 186 நாய்களை பிடித்தது. பிடித்த நாய்களை எங்கும் விடாமல் கூண்டுக்குள்ளேயே அடைத்து வைத்தது.
இதனால் நிறைய நாய்கள் பாதிக்கப்பட்டது. சில நாய்கள் உணவின்றி இறந்து விட்டது. 46 நாய்கள் இவ்வாறு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே நாய்களை கொடூரமாக கொன்றதாக ஐஐடி நிர்வாகம் மீது பெங்களூரை சேர்ந்த ஹரிஷ் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரை மயிலாப்பூர் துணை ஆணையர் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
