தமிழகத்தில் தினமும் இரண்டு மணிநேரமாவது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும் என்ற மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,00,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 12500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. முதலில் அறிவித்த ஏப்ரல் 14 அன்று முடிந்த நிலையில் மேலும் 20 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுவுக்கு அடிமையானவர்கள் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் போதைக்காக கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் போன்ற அபாயகரமான பாதை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தினமும் இரண்டு மணிநேரம் கடை திறக்க வேண்டும் என சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வசந்த் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் ‘ஊரடங்கின் போது மது கிடைக்க வழி செய்யும் கேரள மற்றும் அஸ்ஸாம் மாநில அரசுகளின் உத்தரவை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது’ எனக் கூறிய வாதத்தை ஏற்று நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

