Latest News
டெல்லியில் மறுக்கப்பட்ட விடுதலை வீரர்கள் ஊர்தி- சென்னையில் அணிவகுப்பு
இந்திய விடுதலைக்காக போராடிய தமிழக வீரர்களில் செக்கிழுத்த செம்மல் வ உ சி, பாரதியார், மருதுபாண்டியர்கள், வேலு நாச்சியார் ஆகியோரது ஊர்திகளுக்கு டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் இவர்களின் ஊர்திகள் அணிவகுக்காத நிலையில்
அதன்படி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற்றது.
அதில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன்
தமிழகத்தில் முதன்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடி ஏற்றினார்.
இதனை தொடர்ந்து,
டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் 3 ஊர்திகள் சென்னையில் அணிவகுத்து சென்றன.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக வடிமைக்கப்பட்ட அலங்கார உறுதிகள் சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 3 ஊர்திகள் சென்னையில் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன.
அதில்,முதல் உறுதி:
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் கூடிய அலங்கார ஊர்தியாகும்.
விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிபடுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தன.
தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் தத்ரூப உருவங்கள் அடங்கிய தத்ரூப சிலைகள் கொண்ட ஊர்தி யாகும்.
இதனால் குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட சிலைகள் தமிழ்நாட்டில் வந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.