சென்னையில் முதல்முறையாக கால் பதித்த பாஜக

சென்னையில் முதல்முறையாக கால் பதித்த பாஜக

பாஜக கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் அதன் வெற்றியெல்லாம் பெரும்பாலும் தமிழ்நாட்டின் தென்மாவட்ட கடைக்கோடி மாவட்டங்களான கன்னியாகுமரி பகுதிகளிலும், கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை பகுதிகளிலும் மட்டுமே ஓரளவு வெற்றி பெற்று வந்தது.

இந்த நிலையில் மூத்த பாரதிய ஜனதா வேட்பாளரான உமா ஆனந்தன் சென்னையில் உள்ள 134வது வார்டில் பாரதிய ஜனதா சார்பில் தாமரை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

134வது வார்டில் 55539 வாக்குகள் பெற்று பாரதிய ஜனதா வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார்.