Latest News
சென்னையில் பரபரப்பு- திடீரென வெடித்த கார்
சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் கணேசன்.இவர் அண்ணா நகரில் இருந்து திருமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக இன்னோவா காரில் சென்றுள்ளார்.
அப்போது திடீரென கார் வெடித்தது.கார் வெடித்ததில் இன்னோவா கார் முழுவதும் வேகமாக பற்றிக்கொண்டது. உடனே அருகில் இருந்தோர் வேகமாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர்.
தொழில் அதிபர் கணேசனுக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெ.ஜெ நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.
ஓடும்போது தீப்பற்றி எரிந்த காஸ்ட்லி கார், பரபரப்பு சம்பவம்.. தொழிலதிபர் பரிதாப நிலை..! #Carfire #Chennai #Accident pic.twitter.com/dcb2EFG8hB
— Polimer News (@polimernews) June 5, 2022
