சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பரவியுள்ளதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதுவரை சென்னையில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் பலியாகி, 103 பேர் குணமாகியுள்ளனர். சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் நேற்று முன்தினம் வரை, மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் மட்டும் தொற்று இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது அம்பத்தூர் மற்றும் மணலி ஆகிய இடங்களிலும் தலா ஒரு பாதிப்புக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலவாரியாக பாதிப்பு
- ராயபுரம் 117 பேர்
- தண்டையார்ப்பேட்டை – 46 பேர்
- திருவிக நகர் – 45 பேர்,
- தேனாம்பேட்டை – 44 பேர்,
- கோடம்பாக்கதம் – 36 பேர்,
- அண்ணாநகர் – 32 பேர்.
- திருவொற்றியூர் – 13 பேர்,
- வளசரவாக்கம் – 10 பேர்,
- பெருங்குடி – 8 பேர்,
- ஆலந்தூர் மற்றும் அடையார்- தலா 7 பேர்,
- மாதவரம் – 3 பேர்
- சோழிங்கநல்லூர் – 2 பேர்
- அம்பத்தூர் – 1 நபர்,
- மணலி – 1 நபர்