90களின் இறுதியிலும் 2000ங்களின் ஆரம்பத்திலும் மிக பிரபலமாக இருந்தவர் நடிகர் சாப்ளின் பாலு. இவர் நடிகர் விவேக், வையாபுரி உள்ளிட்ட நடிகர்களுடன் அதிகம் இணைந்து காமெடி செய்துள்ளார்.
நினைவிருக்கும் வரை படத்தில் தூங்கி கொண்டிருக்கும் இவரை எழுப்பி ஜானி வீடு எங்க இருக்கு என விவேக் அட்ரஸ் கேட்கும் காமெடியை மறக்க முடியாது.
இப்படியாக தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து கொண்டிருந்த சாப்ளின் பாலு திடீரென காணாமல் போனார் . சினிமா வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாத நிலையில் அவ்வப்போது ஏதாவது சிறு படங்களில் தலை காட்டி வருகிறார்.
இப்போது இவர் ஓட்ட சட்டி என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.விவசாயத்தை பற்றிய படமாக இது இருக்கிறது. வேந்தன் ரதி என்பவர் இந்த குறும்படத்தை இயக்கி இருக்கிறார். இதோ அந்த குறும்படம்.