நிலவை மிக அருகில் புகைப்படம் எடுத்த சந்திராயன் 2…

222

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் நிலவை மிகவும் அருகில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இந்தியாவை பெருமை படுத்தும் வகையில் நமது இஸ்ரோ கடந்த ஜூலை 22ம் தேதி ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த 14ம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவின் பாதையை நோக்கி நேர்க்கோட்டில் பயணிக்க தொடங்கியது.

இந்நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திராயன் விண்கலம் நிலவை மிகவும் அருகில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பாருங்க:  ஜாக்கிஜான் நடித்த வான் கார்ட் தமிழ்ப்பட ட்ரெய்லர்