தமிழகத்தின் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனையடுத்து, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.