10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதா?? கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!

466
CM Edappadi - Education Min. Sengottaiyan
CM Edappadi - Education Min. Sengottaiyan

தமிழகத்தில் கொரொனா தாக்கத்தால், கடந்த மார்ச் மாதம் தொடங்கயிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் ஜீன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், தேர்வு நடைமுறைகள் குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகின்றார். ஜூன் 1 முதல் 12 வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அதன்படி, கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

பாருங்க:  மே 23 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்