Entertainment
மீண்டும் சாணக்யா முடக்கம்
தந்தி டிவியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரபல ஊடகவியலாளர் திரு. ரங்கராஜ் பாண்டே. இவர் தந்தி குழுமத்தை விட்டு விலகி சாணக்யா என்ற பெயரில் ஒரு யூ டியூப் சேனலை ஆரம்பித்தார். இந்த செய்தி சேனலை நேற்று முன் தினம் யாரோ விஷமிகள் ஹேக் செய்து வைத்திருந்தனர்.
மிகுந்த போராட்டத்துக்கு பின் அந்த சேனல் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. இது குறித்து ரங்கராஜ் பாண்டே மகிழ்ச்சி தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் அந்த சேனல் இன்று முடக்கப்பட்டுள்ளது.
48 மணி நேரத்துக்கு முன்னாடி இருந்த அதே நிலை.
பக்கத்தை மீண்டும் Hackகி இருக்கிறார்கள். முறையீடு செய்திருக்கிறோம். இறைவன் கருணை, உங்கள் அன்பால் மீண்டு(ம்) வருவோம். மற்றவை வழக்கம் போல்.என ரங்கராஜ் பாண்டே கூறி இருக்கிறார்.
