நாளை நமது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி
*நமது இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக நமது தேசிய கீதத்தை பாடினால் இந்திய அரசு நமக்கு சான்றிதழ் தருகிறது.*
1) தயவுசெய்து
http://rashtragaan.in என்ற இணையதளத்திற்குச் சென்று தேசிய கீதத்தின் உங்கள் பதிவை சுயமாக பதிவு செய்வதற்கான நடைமுறை.
2) அதில் இடப்புறம் கீழே உள்ள *மொழிகளில் தமிழை* தேர்ந்தெடுக்கவும்.
3) பின்பு வலது புறம் கீழே உள்ள *தொடரவும்* என்ற பட்டனை தேர்ந்தெடுக்கவும்.
4) உங்களது பெயர், வயது, மாநிலம் ஆகியவற்றை கொடுத்து *பாடுவோம்* என்ற பட்டனை தொடவும்.
5) அடுத்த திரையில், இடது புறம் கீழே உள்ள *ரெக்கார்டு செய்யவும்* என்ற பட்டனை தொட்டால் மேலே உள்ள கட்டத்தில் நமது தேசிய கீதம் காட்டப்படும். அதனை பார்த்தும் நாம் பாடலை பாடலாம்.
6) தேசிய கீதம் பாடல் பாடி முடித்த பிறகு நடுவிலுள்ள *அப்லோட் செய்யவும்* பட்டனை தொட்டால் நமக்கான சான்றிதழ் கிடைக்கும்.
அதனை நமது போனிலேயே டவுன்லோட் செய்து கொள்ளலாம்
அனைத்து வயதினரும், அவர்களின் பெற்றோரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த நடவடிக்கையில் பங்கேற்கலாம்.
பங்கேற்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 14, 2021.
*அனைத்து இந்தியர்களிடமும் பெருமை மற்றும் ஒற்றுமையை வளர்க்க தேசிய கீதத்தை ஒன்றிணைத்து பாடுவோம்!*