தமிழகத்தில், இன்று கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாகவும், இன்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரானாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் இறந்துள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,437-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில், தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக:சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு. வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி. கடலூர், திருவள்ளூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது, இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்தபடவுள்ளதாக கூறப்படுகின்றது.