Latest News
வெளியானது சென்னை ரயில் விபத்தின் சிசி டிவி காட்சிகள்
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ஒரு நாளைக்கு எண்ணற்ற ரயில்கள் சென்று வருகின்றன. நீண்ட நாட்கள் இயக்கப்பட்டு வரும் இந்த சர்வீஸில் இதுவரை பெரிய விபத்துக்கள் எதுவும் நடந்தது இல்லை.
முதல்முறையாக நேற்று நடந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பீச் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிய ரயில் அசுர வேகமெடுத்து டிராக்கை விட்டு இறங்கி நடைபாதையில் லேசாக மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வண்டியில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை, ப்ளாட்பார்மில் நின்றவர்களும் அனைவரும் ஓடி விட்டனர்.
இஞ்சின் டிரைவர் சங்கர் மட்டும் சிறு காயங்களுடன் குதித்து உயிர் தப்பினார்.
இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான சிசி டிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
