Entertainment
திரைப்படத்துறையில் ஜாதி உண்டு ரஞ்சித்- ஜாதி இல்லை கமல்- இருவரின் வாதம்
கமலும் ரஞ்சித்தும் இணைந்து ஒரு படம் செய்ய இருப்பதாக பேசப்பட்டது இந்த நிலையில் கமலும் ரஞ்சித்தும் மாற்று கருத்துக்களை பேசி இருப்பது ஒரு சர்ச்சைக்குரிய விசயமாக பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 14-ம் தேதி இசைவெளியிட்டு விழா ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமாவிற்கு சாதி, மதம் எதுவும் கிடையாது. யார் என்ன கூறினாலும் பரவாயில்லை, சினிமாவிற்கு சாதி மதம் கிடையாது. இங்கு விளக்கை அணைத்தால் ஒரே ஒளி மட்டும்தான் என்று பேசியிருந்தார். இந்நிலையில் கமலின் இந்த கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாத்துறையில் சாதி வேற்றுமை இருக்கிறது என்ற எனது நிலைப்பாட்டில் நான் தெளிவாக இருக்கிறேன். அவற்றை நான் உணரவும் செய்கிறேன் என பா.ரஞ்சித் பதிலளித்துள்ளார்.
